அலுவல்முறையில் அல்லாத மடல்கள் எழுதுவதும் பதிலிடுவதும் அருகிக்கொண்டிருக்கும்
வாழ்க்கை அமைப்பில் ஏறத்தாழ மூன்று திங்களாக பதிலுக்காக ஓர் அஞ்சலட்டை என் மேசைமீது காத்துக்கொண்டே இருந்தது. விடை எழுத வேண்டும் என்ற உணர்வும் அவ்வப்போது எழுந்துகொண்டே இருந்தது. அந்தக் கடிதத்திற்கு இனி நான் விடை எழுதினாலும் அதைப் பெற வேண்டியவர் இனி இல்லை. இச்செய்தி இரு கிழமைகளுக்கு முன் அதிர்ச்சி அளித்தபடியே என் செவியில் சேர்ந்தது. நான் பதிப்பித்திருந்த சி. வை. தாமோதரம்பிள்ளை எழுதிய ‘கட்டளைக் கலித்துறை’ நூலின் பத்துப்படிகள் வேண்டும் எனவும், கிடைக்குமிடம் கேட்டும் தமிழ் மண்ணின் முதுபெரும் இலக்கண அறிஞர்களுள் ஒருவரான புதுச்சேரி இரா. திருமுருகன் எழுதிய கடிதம் மட்டும்தான் இப்போது இருக்கின்றது.
வாழையடி வாழையென வந்த பழைய தலைமுறையின் எச்சமாக விளங