எம்.எஸ். (எண்பது வயது இளைஞர்)
இலக்கியம் வாழ்க்கையை வளப்படுத்தும். உறுதியான நம்பிக்கையும் தொடர்ந்த ஈடுபாடும்
அதனோடிருந்தால் உரிய அங்கீகாரத்தைத் தவறாது வழங்கும் என்பதற்கு, நவீனத்
தமிழிலக்கியத்தில் முத்திரை பதிக்கும் குமரி மாவட்ட படைப்புகளின் உந்து சக்தியாகவும்
கிரியா ஊக்கியாகவும் இருந்து வரும் எம்.எஸ். அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவுப்
பாராட்டுவிழா சான்றாக இருந்தது.
15.05.2009 அன்று மாலை, சுந்தர விலாஸ் மாடியில் காலச்சுவடும் நெய்தல் கிருஷ்ணனும் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு முதுபெரும் படைப்பாளி நீல. பத்மனாபன் தலைமை தாங்கி தமது படைப்புக்குரிய நேர்மையான விமர்சனத்தை எம்.எஸ்.சிடமிருந்து பெற்றதை நினைவுகூர்ந்தார். சார்பு நிலையற்றவர்; படைப்புகளை ஆழமாகவும் கவனமாகவும் பார்ப்பார்; பொருள் பிழைகளை மனம் நோகா வண்ணம் சுட்டிக்காட்டுவார்; சாகித்திய அகாதமி விருது பெற்