கவிதையில் கலந்த கவிதை வாசகர்
கவிஞர் ராஜமார்த்தாண்டனின் இறுதி யாத்திரை அவரது ஊரில் நடந்த அன்று (07.06.2009)
‘காலச்சுவடு’ம் நெய்தல் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டம்
நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி அரங்கில் மாலை 4.30க்கு நடந்தது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கவிஞர் கலாப்ரியா, “ராஜமார்த்தாண்டனைக் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக எனக்குத் தெரியும். என் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதாக இருந்தால் அவருக்குச் சில பக்கங்கள் ஒதுக்குவேன். அவர் நடத்திய ‘கோகயம்’, ‘கொல்லிப்பாவை’ இரண்டு இதழ்களுக்கும் பெயர் வைத்தவர் பிரமிள். ராஜமார்த்தாண்டன் கவிஞர், விமர்சகர் என்பதைவிடக் கவிதை வாசகர், கவிதைக்குத் தன்னை அர்ப்பணித்தவர் என்று சொல்வது பொருத்தமானது. இலக்கிய வடிவங்களில் கவிதைதான் அவருக்குப் பிடித்தமானது.