தமிழின் முன்னோடிப் பதிப்பாளர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி
தமிழின் முன்னோடிப் பதிப்பகங்களில் ஒன்று வாசகர் வட்டம். அது புக் கிளப் மாதிரி.
உறுப்பினர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நல்ல தரமான புத்தகங்கள்; தரம் என்றால்
புத்தகத்தின் கருத்து, வளம் என்பது மட்டுமல்ல, புத்தகத் தயாரிப்பிலும் தரமாகக்
கொடுப்பது என்ற தீர்மானத்தோடு 1964-65 ஆண்டுகளில் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வாசகர்
வட்டத்தைத் தொடங்கினார். சிறந்த வாசகரான லட்சுமியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி வாசகர்
வட்டத்தின் அமைப்பிலும் நிர்வாகத்திலும் புத்தகங்கள், ஆசிரியர்கள் தேர்விலும் பங்கு
பெற்றிருந்தார்.
ஆண்டிற்கு ஆறு புத்தகங்கள், கட்டுரைகள், பயண நூல்கள், மக்களுக்குப் பயனுள்ள தகவல் புத்தகங்கள், தொகுப்பு நூல்கள், படைப்பிலக்கியம் எல்லாம் வாசகர் வட்டம் வெளியீட்டில் இடம்பெற்றன. முதல் புத்தகமாக ராஜாஜியின் சோக்ரதர் 1965 ஜனவரியில் வெளிவந்தது.
தமி