பெயரிடப்படாத சம்பவம்
தெருவிளக்கினடியில் அவன் நின்றிருந்தான். தினந்தோறும் அதிகாலையில் நிற்பதால்
அவனுக்குப் பூச்சிகளின் சப்தமும் பனியும் இருட்டும் பழகியிருந்தன. வெள்ளை நிறக்
கால்பந்தும் முகந்துடைத்துக்கொள்வதற்கெனச் சிறிய ஆரஞ்சு நிறத்துண்டும்
விளையாடும்பொழுது அணிந்துகொள்வதற்கென மாற்று உடையும் கையில் வைத்திருந்தான்.
தெருவிளக்கின் வெளிச்சம் அவனைச் சுற்றிப் படர்ந்திருந்தது. இன்னமும் சிறிது
நேரத்தில் விளக்குகள் அணைந்துவிடும். பிறகு வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக்
கோலமிடப் பெண்கள் வரத் தொடங்குவார்கள். அவ்வீதியிலுள்ள பெண்களுக்கு அவனைத்
தெரியும். எட்டு வருடங்களுக்கு மேலாக அவ்வீதியில் அவனது பெற்றோர்களுடன்
வசித்திருக்கிறான். அந்தக் காலத்தில்தான் செல்லியின் வீட்டிலுள்ளவர்களுடன் பழக்கம்
ஏற்பட்டது. செல்லியின் தம்பி தம்புவுடன் கால்பந்து விளையாட மைதானத்திற்க