புகழ்வாய்ந்த படைப்பாளியான தாங்கள் (தங்கள் படைப்புகளைப் பிற இதழ்கள்
வெளியிடக்காத்துக் கொண்டிருக்கும் சூழலில்) ஓர் இலக்கியச் சிற்றிதழ் நடத்த வேண்டிய
அவசியம் என்ன?
புகழ் வாய்ந்த படைப்பாளி என்று என்னைக் கூற முடியுமா என்பது தெரியவில்லை. நான் பெற்றிருக்கும் வாசகப் பரப்பை, புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றிருக்கும் வாசகப் பரப்போடு ஒப்பிட்டுப் பாருங்கள். என் படைப்புகளைப் பிற இதழ்கள் வெளியிடக் காத்துக்கொண்டிருக்கும் சூழல் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆழமான கருத்தாக்கங்களுக்குப் புகழ்பெற்ற இதழ்கள் இடம் தருவதில்லை. சிற்றிதழுக்கு வெளியே இன்றும் பொருட்படுத்தத் தகுந்த கட்டுரைகள் ‘தினமணி’ நாளிதழ் - தலையங்கப் பக்கங்களில் - மட்டுமே வெளிவருகின்றன. ஆழமான படைப்புகளுக்கு இடம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ‘காலச்சுவடு&rsquo