அரசியல் கட்சிகள் அவர்தம் குறுகியகால தேர்தல் வெற்றிகளுக்கு நிரந்தரமான பண்புகளை வழங்கும் நோக்கத்தோடு அவற்றுக்கு போர்க்கால அல்லது வரலாற்று விவரணைகளை அளிக்க முந்துகின்றன. இந்தியாவில் பிற கட்சிகளைவிட பாஜக தனது சாதனைகளை மிகைப்படுத்தவும் அவற்றைச் சொற்களால் அலங்கரிக்கவும் அழகுபடுத்தவும் முந்துகிறது. 2008இல் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அறுதிப்பெரும் பான்மைக்கு 3 சீட்டுகள் குறைவாக அவர்கள் வென்று சுயேட்சைகளின் உதவியுடன் ஆட்சி அமைத்தபோது கர்நாடகத்தை அவர்கள் தெற்கிற்கான ராஜபாதையாக வர்ணித்தார்கள். மதச்சார்பற்ற கட்சிகளின் கோட்டையை உடைத்து விட்டதாக ஏதோ படையெடுத்து வந்ததுபோலப் பேசினார்கள். காவிப்படையின் முன்னேற்றத்தை யாரும் தடுக்க முடியாது என்று முழங்கினர். இப்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2013 தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில் அவர்களது ராஜபாதை சிதைந்துவிட்டது. காவிப்படை சிதறிவிட்டது. பிற முழக்கங்களும் இப்போது வெற்றாக ஒலிக்கின்றன.
பாஜக அதனுடைய அடித்தளமான கடலோர மாவட்டங்களைக் கைப்பற்றியிருந்தால்கூட அவர்களது தோல்வி பற்றி இவ்வளவு ஆணித்தரமாக பேசியிருக்க முடியாது. தட்சிண க