மரக்காணம்: மற்றுமொரு வரலாற்றுச் சாட்சியம்
மரக்காணம் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பான கட்டையன் தெருவைச் சென்றடைந்தபோது மூன்று நாட்கள் தாமதமாகியிருந்தன. ஏப்ரல் 25ஆம் நாள் ‘கோடிவன்னியர் கூடும் சித்திரை முழுநிலவு விழா’ மாமல்லபுரத்தில் நடந்தது. அதே நாளில் பட்டப்பகலில் கட்டையன் தெருவிலும் புதுச் சேரியிலிருந்து மரக்காணம் வரும் வழியில் அங்கங்கும் தலித் மக்கள் மீது பா.ம.க. வினர் கொடூர ஆட்டத் தை நிகழ்த்த ஆரம்பித்துவிட்டனர்.
பி.யூ.சி.எல். சார்பில் உண்மை அறியும் குழுவில் நாங்கள் (பேராசிரியர் சரசுவதி, த.முகேஷ், ராகவராஜ், கௌதம் பாஸ்கர்) சென்ற நாள் ஏப்ரல் 29. நிற்கக் கூட இயலாத தில்லையாம்பாள் என்ற (67 வயது) மூதாட்டியின் நெல் மூட்டைகளும் வைக்கோல் போரும் எரிந்துபோயிருந்தன. குத்துக்காலிட்டு உட்கார்ந்து வைக்கோல் படப்பும் தொழுவமும் எரிந்து கிடந்ததைக் காட்டி அழுதார். துரை என்பவரது மனைவி ரூபாவதியின் சினைப்பசு சில நாட்களே இருந்தன ஈனுவதற்கு. அதையும் கொளுத்தினார்கள். <img border="0" height="305" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/c