நவீனத் தமிழ் இலக்கிய நட்சத்திரமாக ஆவதற்கு பத்து டிப்ஸ்கள்
1. நான் பிறக்கும்போதே பேனாவுடன் பிறந்தவன்; எனது மூதாதைகள் லத்தீன் அமெரிக்கா/ ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நவீன எழுத்தாளர்கள்.
2. தமிழில் எனக்கு முன்னோடிகள் கிடையாது; நான் தமிழ் இலக்கியங்களை வாசித்ததுமில்லை, வாசிப்பதுமில்லை; என்னைத் தவிர தமிழ் இலக்கியத்தில் கொம்பன்கள் எவனும் கிடையாது.
3. தமிழில் எனக்கு முன்பு கவிதையோ சிறுகதையோ இல்லை; நகுலன் மட்டுமே அதற்கான முயற்சிகளைச் செய்து பார்த்துத் தோற்றுப் போயிருந்தார்.
-இவை நீங்கள் விட வேண்டிய அதிரடி அறிக்கைகள்.
இனி, உங்களுக்கான தகுதிகள்:
4. தமிழ்ச் சொற்களையும் வாக்கியங்களையும் இலக்கணப் பிழையோடு எழுதத் தெரிந்திருக்க வேண்டும். உப்புப் பெறாத விஷயங்களையும் சொல் ஜாலங்கள் காட்டி, அவை மகா தத்துவங்கள் என்பது போன்ற மயக்கத்தை வணிக வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இது படைப்பிலக்கியங்கள், கட்டுரைத்