கர்நாடகத் தேர்தல்: காங்கிரஸுக்குத் திருப்புமுனை
சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைத் தழுவியதும் காங்கிரஸ் கட்சி மீண்டும் பதவிக்கு வந்ததும் நாடு முழுவதும் அறியப்பட்ட விஷயங்கள். காங்கிரஸ் கட்சி என்னும் கப்பல் கடந்த நான்கு ஐந்து வருடங்களாக ஓட்டைக்கு மேல் ஓட்டை விழுந்து மூழ்கும் தருவாயில், கர்நாட கத்தில் கிடைத்துள்ள வெற்றி அவற்றையெல்லாம் அடைக்கும் Quick Fix என்பது போலப் பலர் உற்சாகம் கொண்டுள்ளனர். காங்கிரஸ் பெரும்பான்மை இடங் களைப் பிடிக்கும் என்று பல கருத்துக் கணிப்புகள் கூறிவந்தபோதும், அரசியல் வல்லுநர்கள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலைமை உருவாகும் என அஞ்சினர். ஒரு கட்சி பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருப்பது கர்நாடக மக்களின் நல்ல காலம். ஒருவேளை காங்கிரஸ் இருபது அல்லது முப்பது இடங்கள் குறைவாகப் பெற்றிருந்தால் பெரிய அரசியல் நாடகம் அரங்கேறியிருக்கும். சட்டமன்ற உறுப்பினர்களைக் காபந்துசெய்து ஆளுநர் முன் ஆஜர்படுத்தித் தனக்குத்தான் பெரும்பான்மை எனக் காட்ட வேண்டிய கட்டாயமும் அதன் ஒரு பகுதியாகப் புதிய கூட்டணிகள் என்று எடியூரப்பா முதல் தேவேகௌடாவின் அருமைப் புதல்வர்வரை