தலித் பற்றிய இரண்டு அரங்குகள்
தலித் இலக்கியம் மற்றும் அறிவுலகம் சார்ந்த செயற்பாடுகள் பல்வேறு காரணங்களால் குறைந்துள்ள நிலையில் அண்மையில் நான் பங்கேற்பாளராகக் கலந்துகொண்ட தலித் பற்றிய இரண்டு கருத்தரங்குகளின் பதிவு இது.
தமிழகத்தில் நடந்த சாதி வன்முறைகளுக்காக அரசாங்கம் நியமித்த விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் மீதான விமர்சனக் கருத்தரங்கு Interrogating the Reports of Judicial Enquiry Commissions on Caste Violence in Tamil Nadu என்ற தலைப்பில் ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் (MIDS) நடந்தது. சென்னை வளர்ச்சி ஆய்வு மையமும் இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கவுன்சிலும் (ICSSR) இணைந்து நடத்திய இக்கருத்தரங்கை எம்.ஐ.டி.எஸ் பேராசிரியர் சி. இலட்சுமணன் ஒருங்கிணைத்திருந்தார். 1950 தொடங்கி 2000ஆம் ஆண்டு வரையில் நடந்த சாதி வன்முறைகளுக்கான 12க்கும் மேற்பட்ட விசாரணைக் கமிஷன் அறிக்கைகள் அரங்கில் பேசப்பட்டன. 1950 தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டுகளாக வரையறுத்து, அவ்வாண்டுகளில் நிகழ்ந்த சமூக வன்முறைகளுக்கான சமூக, பொருளாதார, அரசியல் பின்னணி பற்றிய பேச்சு முதல் அமர்வாக இருந்தது. அடுத்து ஒவ்வொரு அறிக