மலேசியா: இனவாதத்தைத் தூண்டிய தேர்தல்
மலேசியாவின் நடப்பு அரசாங்கம் எப்பொழுது கலைக்கப்படும் என்று தீவிரமாக அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்துக் கணித்து கொண்டிருந்த வேளையில், கடந்த 05.05.2013இல் மலேசியாவின் பொதுத் தேர்தல் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
மே 6, முற்பகல் ஒரு மணிக்கு அதிகாரப்பூர்வமான தேர்தல் முடிவுகள் தெரிய வந்தன. இவ்வளவு காலதாமதமாக முடிவுகள் தெரிய வருவதற்குப் பெரிய காரணங்கள் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பாரிசான் கட்சி வெற்றிபெற்ற செய்தி நாட்டு மக்களுக்கு அதிருப்தியாகவே இருந்தது. காரணம் இது உண்மையான நேர்மையான தேர்தல் முடிவல்ல. இதில் கீழறுப்பு வேலைகள் நடந்துள்ளன என மக்கள் நம்பினர்.
ஏனென்றால், இதுவரை பனிரெண்டு தேர்தல்களில் இல்லாத நாட்டமும் புத்துணர்வும் இந்தப் பதின்மூன்றாவது தேர்தலின்போது வெளிப்பட்டது. .இளைஞர்களின் தாக்கம் பெரிதாக வீசியது. ' இந்த தேர்தல் இளைஞர்களி