ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகேயுள்ள சலம்புர் நகரில் தாவூதி போரா முஸ்லிம் குடும்பத்தில் 1939ஆம் ஆண்டு பிறந்தவர் அஸ்கர் அலி எஞ்சினீர். அந்நகரிலிருந்த போரா முஸ்லிம் சமூகத்தின் மதகுருவாக இருந்தவர் இவரது தந்தை ஷய்க் குர்பான் உசைன். தந்தையிடமிருந்து அரபு மொழியையும் இஸ்லாமிய கோட்பாடுகளையும் கற்றார். சிறு வயதிலேயே இஸ்லாமியக் கல்வியுடன் மதச்சார்பற்ற கல்வியும் போதிக்கப்பட்டு கட்டிடப் பொறியியலில் பட்டம் பெற்றார். சுமார் 20 ஆண்டுகள் மும்பை மாநகராட்சியில் பொறியியல் அதிகாரியாக பணியாற்றிய பின்னர் வாழ்க்கையை இஸ்லாமிய சீர்திருத்தம், மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், ஜனநாயகம், முஸ்லிம் பெண்கள் உரிமை ஆகிய விஷயங்களுக்காக அர்ப்பணித்துக் கொண்டார்.
குரான் குறித்தும், இஸ்லாம் குறித்தும் இவர் கொண்டிருந்த புரிதல் மிக ஆழமானது, நவீன காலகட்டத்திற்கு உகந்தது. இவரது கட்டுரைகளை வாசித்து பலன் பெற்ற பல ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இவரது எளிமையான நடையே என்னை அவரது கட்டுரைகளை தொடர்ந்து படிக்கத் தூண்டியது. இஸ்லாம் பற்றி, மீண்டும் மீண்டும் பலரால் இஸ்லாம் பற்றிச் சொல்லப்படும் ஒரே விதமான கு