வெந்து தணிந்த நிலத்தில்...
இலங்கையின் வடக்கு கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைகள் தொடர் பாகவும் குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம், சமூக, பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும்
ஆய்ந்தறியும் பணியினை மேற் கொள்வதற்காக 2012இன் நடுப்பகுதியில் வடக்கின் பல
பிராந்தியங்களுக்குப் பயணித் திருந்தேன். போரில் கொல்லப்பட்ட பெண்கள் தொடர்பான பதிவுகள் தவிர்த்து, போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வு குறித்தப் பதிவுகள் குறைந்தளவு கவனத்தையே பெற்றுள்ளன.
முள்ளிவாய்க்காலில் முடிவு க்குக் கொண்டுவரப்பட்ட போர் இன அழிப்பாக சர்வதேச விவகார மாகியிருப்பதனாலும், அது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தும் கவனத்தைப் பெற்று வருவதனாலும் வடக்கிற்கு மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பணி யாளர்கள், பத்திரிகையாளர்கள் செல்வதென்பது உயிருக்கு உத்தர வாதமற்ற காரியமே. இத்தகைய பரீட்சையை எதிர்கொள்கின்ற சித்தத்துடனே எனது பயணத்தைத் தொடங்கியிருந்தேன். <img border="0" height="300" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c2988