முன் அறிவிக்கப்படாத ஞாபக மரணங்களின் பதிவு
வாழ்க்கையில் முக்கியமானது உங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதல்ல. நீங்கள் எதை நினைவுகூர்கிறீர்கள்; எப்படி நினைவுகூர்கிறீர்கள் என்பதுதான்.
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
மார்க்கேஸின் எல்லாப் படைப்புகளையும் நினைவு, மரணம் ஆகிய இரண்டு நிலைகளில் பொதுமைப்படுத்திவிடலாம். இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் நினைவுகளின் மரணமும் மரணம் பற்றிய நினைவுகளும். பல்தசாரின் அற்புதப் பிற்பகல், செவ்வாய்க்கிழமை பிற்பகல் தூக்கம், இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை, மகோந்தாவில் மழை பெய்வதைப் பார்த்துக்கொண்டிருக்கும் இசபெல்லின் தனிமொழி போன்ற ஆரம்பகாலக் கதைகள், அறிமுகமற்ற புனிதப் பயணிகள் தொகுப்பில் இடம்பெறும் ஒரு தொலைபேசி அழைப்புக்காக மட்டுமே போன்ற சில கதைகள் தவிர அவரது பிற கதைகளிலும் நாவல்களிலும் முன்சொன்ன இரு நிலைகள் நேரடியாக இடம்பெறுவதில்லை. ஆனால் அந்தக் கதைகளிலும் நினைவுகளின் அரண்ட வெளிச்சமும் மரணத்தின் இருளும் நிலவுகின்றன.<img border="0" height="245" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c2988