அம்பலமாகும் இந்திய பயங்கரவாதம்
எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இந்த சரப்ஜித் சிங்?
நமக்கு சரப்ஜித் சிங் தொடர்பாக இரண்டு கதைகள் தெரியும். சரப்ஜித் சிங் ஓர் அப்பாவி. இந்தியா - பாகிஸ் தான் எல்லை அருகே போதையில் சுற்றித் திரிந்த சரப்ஜித் சிங்கைக் கைதுசெய்த பாகிஸ்தான், அவரை இந்திய உளவாளியாகச் சித்திரித்து சிறையில் அடைத்தது. ஒரு குண்டுவெடிப்பு வழக்கில