நெடுஞ்சுவர் கட்டைமண்ணான கதை
1990களில் தமிழ் அறிவுலகின் சில முகாம்களில் டாக்டர் ராமதாஸ் ஒரு விடிவெள்ளியாக இருந்தார். பெரியாருக்குப் பின்னர் தோன்றிய பெரியாராகப் பார்க்கப்பட்டார். அந்நாட்களில் திராவிட இயக்கத்தின் மூல லட்சியங்களை மீட்டெடுக்கும் இயக்கமாக பா.ம.க. பார்க்கப்பட்டது. பா.ம.க. வெளியிட்ட ஒரு மலரில் அன்றைய முன்னணி மார்க்சியப் பெரியாரிய அறிஞர்கள் பெருமிதத்துடன் பங்களித்தனர். இன்று அவர்களில் பெரும்பான்மையினர் பா.ம.க.வின் தீண்டாதார் பட்டியலில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அனைத்து அரசியல் கட்சிகளுமே உருப்பெரும் காலத்தில் அறிவுஜீவிகளின் அருகாமையை விரும்புகின்றன. வளர்ச்சியடைந்த பின்னர் அவர்களை வெறுக்கின்றன. இருப்பினும் ஒவ்வொருமுறை இது ஏற்படும்போதும் நம் அறிவுஜீவிகள் நம்பிக்கையுடன் ஒத்துழைக்கின்றனர். விலக்கப்பட்ட பின்னர் அதிர்ச்சி யடைவதை அறிவிக்கின்றனர். அரசியல் கட்சிகளுக்கு உருவாகும் காலத்தில் ஒரு கோட்பாட்டு அடித்தளம் தேவைப்படுகிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க, கோட் பாடு அவசியம். பின்னர் நடைமுறை அரசியலை எதிர்கொள்வதில் கோட்பாடு முட்டுக்கட்டையாகிறது. அறிவுஜீ