நாகம்மாளும் சுடலையம்மாவும்
‘மரப்பாச்சி’ குழுவினர் வழங்கிய ‘வாக்குமூலம்’, ‘சுடலையம்மா’ ஆகிய இரு நாடகங்களும் ஒரே மேடையில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்டன.
நாடகங்கள் உருவானதன் பின்னணி சுவாரஸ்யமானது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஜனநாயக மாதர் சங்கத்திலும் அனுபவம் மிக்கவர் மைதிலி சிவராமன். இவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார் பெண்ணிய வரலாற்றாளர் வ. கீதா.
நெருக்கடி நிலை காலகட்டத்தில் காவல் துறையின் வன்முறைக்கு ஆளான நாகம்மாள், சீராளன் ஆகியோரின் அனுபவத்தை சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய கட்டுரை ஒன்றில் பதிவு செய்திருந்தார் மைதிலி. நாகம்மாளின் போராட்டத்தையும் சீராளனுக்கு நேர்ந்த கொடுமையையும் நாடக வடிவத்தில் மறுபதிவு செய்யும் எண்ணம் ஏற்பட்டது. கீதா எழுதிய பனுவலுக்கு இயக்குநர் அ. மங்கை நாடக வடிவம் தந்திருந்தார்.<img border="0" height="267" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-162/pics/event1.jpg"