பெரியார்: ஒரு பார்வை
’காலச்சுவடு’ மார்ச் இதழில் வெளியான பி.ஏ. கிருஷ்ணனின் ‘பெரியார் ஒரு பார்வை’ என்னும் கட்டுரையை விட ஏப்ரல் இதழில் வெளியான அகமுடை நம்பியின் விவாதம் சுவாரசியமாக இருந்தது. விவாதத்தின் இறுதியில் பிராமணர் என்ற முறையில் உயர்வு மனப்பான்மை கொண்டவராக இருந்தபோதும் இவரை தமிழராக ஏற்றுக்கொள்கிறோம் என்று ‘ஆதார்’ அடையாள அட்டை கொடுத்திருப்பது வேடிக்கையான விஷயம். தமிழர்களுக்கு எப்போதுமே எதிரிகள் தேவைப்படுகிறார்கள். நிஜமான எதிரிகள் இல்லாத போது கற்பனை எதிரிகளைத் தயார் செய்து கொள் கிறார்கள். தமிழர்களில் ஒரு பகுதியினர் சாதீயப் பாகுபாட்டால் வெகுவாகப் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்காகப் பேசுவதாகச் சொல்லிக் கொண்ட வர்கள் இந்த ‘இரு துருவ’ அரசியலை மிக சாமர்த்திய மாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். பெரியாருக்குப் பிறகு கர்நாடகத்தைச் சேர்ந்த தலித் செயற்பாட்டாளரும் ‘தலித் வாய்ஸ்’ என்னும் பத்திரிகையை நடத்தி வந்தவருமான ராஜசேகர், காஞ்சா இலையா, அ.மார்க்ஸ் ஆகியோர் இப்பணியைச் செய்து வருகிறார்கள். பல இனங்கள், மதங்கள், சாதிகள், வர்க்கங்கள் கொண்ட தமிழ் ச