40வது இலண்டன் இலக்கியச் சந்திப்பில்...
லண்டன் இலக்கியச் சந்திப்பில் பௌசர் பகிரங்கமாக, நான் முகநூலில் எழுது பவை எனது வாழ்க்கைத் தோழன் தமயந்தியினாலேயே எழுதப் படுவ தாக ஓர் அபாண்டத்தை அவிழ்த்து விட்டார். அதைநான் கடுமையாகக் கண்டித்து உடனடியாகவே ஒரு காணொளியை வெளியிட்டேன். சில தினங்களின் பின் தமிழின் முக்கிய மான பெண் படைப்பாளிகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை இணையத்தில் வெளியிட்டு, பௌசர் தனது ஆணாதிக்கக் கருத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்றோம்.
தான் அவ்வாறாகப் பேசவில்லை எனப் பௌசர் சொல்வதை ஏற்க முடியாது. சந்திப்பில் கலந்துகொண்ட உமா, கலையரசன், ராகவன் மற்றும் சில தோழர்கள் பௌசர் அவ்வாறு பேசியதை எழுத்து மூலம் உறுதி செய்திருக்கிறார்கள். ஆணாதிக்கச் சூழலில் பானுபாரதி அவ்வாறு அவரது கணவரால் பயன் படுத்தப்படுகிறாரோ என்றே தான் கருதிப் பேசியதாகக் காலச்சுவடில் பௌசர் பதிவுசெய்து தனது ஆணாதிக்
கத்திற்குப் பொறுப்புச் சொல்லாமல் நழுவப் பார்க்கிறார். இது போதாது என்று லஷ்மி 'ஊடறு' டாட்கொம்மில் எழுதிய கட்டுரையில் ‘மீனா கந்தசாமி அவரது கணவனால் இவ்வாறு பயன்படுத்தப்பட்டதால் பௌசர் இப்படியான சந்தேகத்தை எழுப்பியதில் தவறேய