சில வாரங்களுக்கு முன்னர், மரக்காணம் கலவரத்தையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றிய பத்திரிகை யாளரொருவரின் கேள்விக்குப் பதிலளித்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வருங்காலங்களில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிடும் எனத் திட்டவட்டமாக அறிவித்தார். அந்த முடிவில் தான் எந்த அளவுக்கு உறுதியாக இருக்கிறேன் என்பதைச் சொல்வதற்கு அவர் திமுக தலைவர் மு. கருணாநிதி அடிக்கடி பயன்படுத்திவரும் புகழ் பெற்ற மேற்கோள்கள் சிலவற்றைப் பயன்படுத்தினார். “வான் உள்ள அளவும் கடல் மீன் உள்ள அளவும், கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும்” என்பன போன்ற அவரது மேற்கோள்களைப் பயன் படுத்திய ராமதாஸ் “வரும் நாடாளு மன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை. இரண்டு கோடி வன்னியர்களின் ஆதரவைப் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே போட்டியிட்டுக் குறைந்தபட்சம் பத்துத் தொகுதிகளில் வெற்றி பெறும். 2016 சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான் மையுடன் ஆட்சியையும் பிடிக்கும்” என அறிவித்தார். அப்போது அவர்