ஹார்வர்ட் தமிழ் இருக்கை மொழியும் பயனும்
ஒரு மொழிக்குப் பெருமை அதைப் பேசுபவர்கள் அந்த மொழிக்குத் தரும் கொடையால் வருவது. கொடை இலக்கியக் கொடையாக, இலக்கணக் கொடையாக, கலைக்கொடையாக, அறிவுக்கொடையாக இருக்கலாம். இப்படிப்பட்ட கொடைகளால் தமிழ் பெற்ற பெருமை உலகில் சில மொழிகளுக்கே உண்டு. இது தமிழின் காலப் பழைமையால் மட்டும் வந்த ஒன்றல்ல, கொடையின் தரத்தாலும் வந்த ஒன்று. இந்தத் தரத்தை இக்காலத்திலும் தமிழுக்கு நம் கொடையின் மூலம் தொடர வைப்பது நாம் தமிழுக்குப் புதிதாகச் சேர்க்கும் பெருமையாகும்; பழைய பெருமையைத் தக்கவைப்பதும் ஆகும்.
தமிழின் பெருமைக்கு அதிகார அமைப்புகளின் அங்கீகாரம் வேண்டுவது தமிழ்ச் சமூகத்தின் ஆசை. இது எல்லாச் சமூகங்களுக்கும் இருக்கும் ஆசைதான். ஆனால், பெருமையே அதிகார அங்கீகாரத்தால் வருகிறது என்று நினைப்பது தமிழ்ப் பண்பாட்டின் ஓர் அம்சம் என்று எண்ணத் தோன்றுகிறது. தான் பெற்ற குழந்தைக்கே ஓர் அரசியல் தலைவரின் வாயால் பெயர் சூட்டுவது பெரும