“எண்ணிய முடிதல் வேண்டும்“
காலை மணி 9.30க்கும் 10க்கும் இடையிலான சுபவேளையில் சுமார் 40 வயதுடைய சுரேஷ் என்பவர் 67 வயது கணபதி என்பவரின் இல்லம் சென்று ரூபாய் ஒரு லட்சம் மதிப்புக்கு ஐம்பது 2000 ரூபாய் தாள்களையும் ரூபாய் 29 லட்சத்துக்கு நான்கு காசோலைகளையும் வழங்குகிறார். அக் காசோலைகளையும் தாள்களையும் பார்த்தவுடன் கணபதி உளப்பூரிப்பு அடைந்திருப்பார். மகிழ்வுடன் அவற்றைப் பெற்று டாக்டரான தன் மகள் கையில் கொடுத்திருக்கிறார். மகளது விழிகள் பிரகாசித்திருக்கும். அவர் அவற்றை வீட்டினுள் கொண்டு சென்று பீரோவுக்குள் வைத்திருக்கிறார். திடீரென கணபதி வீட்டினுள் நுழைந்த 20 பேர் கணபதியைச் சுற்றி வளைத்தபோதே தான் பொறியில் சிக்கியிருப்பதை உணர்கிறார் கணபதி. சுற்றி வளைத்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியாத முட்டாள் அல்ல அவர். அவரது மனைவியும் ஒரு புத்திசாலிப் பெண்தான். நிலைமையைப் புரிந்துகொண்ட கணபதியின் மனைவி ஸ்வர்ணலதா உஷாராகி விரைந