பெர்னார்ட் பிறந்தார்
புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டே யிருந்தான். புரட்டக்கூடத் தோன்ற வில்லை. முதல்பக்கத்திலேயே கண் நிலைகுத்தியிருந்தது. பத்துநிமிடம் கழித்துத்தான் நினைவில் மின்னலடித்தது. ‘Mrs. Warren’s Profession’ நாடகத்தைத் தேடிப்பிடித்தான். இதைத்தான் அவள் மொழிபெயர்ப்பதாய்ச் சொல்லியிருந்தாள். அந்நாடகத்தை ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டிக்கொண்டிருந்தான். ஒரு குறிப்பிட்ட பக்கத்தில், அவள் ஒப்பமிட்டிருந்தாள். அந்த அவள் கையெழுத்தை ஒருபோதும் அவனால் மறக்கமுடியாது. பாம்பு ஊர்வது போன்ற ஒருவிதக் கிறுக்கலான எழுத்து. அது அவள்தான் என்பதில் இனித் துளியும் சந்தேகமில்லை. “TO DMS’ (அவனுக்கும் அவளுக்குமிடையிலான ஒரு சங்கேத வார்த்தை அது) என்ற விளிப்புடன், கீழே நான்குவரிகளை அவள் அடிக்கோடிட்டிருந்தாள்.
We must part. It will not make much difference to us:
Instead of meeting one another
for perhaps a few months in twenty years,
We shall never meet: that’s all.
ஒரு கல்யாண வீட்டில்தான் முதலில் அவளைச் சந்தித்தான். வெங்காய நிறத்தில் தாவண