மருத்துவத்திற்குச் சோதனை
எல்லா மருத்துவ முறைகளுக்கும் நோக்கம் ஒன்றுதான் - நோயுற்றவரைக் குணமாக்க வேண்டும். பாரம்பரிய வைத்தியங்களுடன் அறிவியல் சார்ந்த நவீன மருத்துவமும் இணைந்து பிணியை நீக்கச் செயல்பட முடிந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்? மருத்துவருக்கு எல்லா வைத்திய முறைகளிலும் பரிச்சயம் இருந்தால், ஒரு குறிப்பிட்ட தறுவாய்க்கு எது சிறந்ததோ அதை அவர் பயன்படுத்திக் கொள்ளலாமே... இந்த முறைதான் தனக்கு வேண்டும் என்று நோயாளி கூறத் தேவையிருக்காது. ஆனால் பல மருத்துவ முறைகளை ஒன்றிணைக்க முடியும் எனும் கருத்து, போகாத ஊருக்கு வழிகாட்டுவது போலாகும். பாரம்பரிய மருத்துவ முறையும் அறிவியல் சார்ந்த மருத்துவமும் இணைந்து செயல்பட முடியாது.
பாரம்பரிய மருத்துவம்
இந்தக் கசப்பான யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள, இரு அமைப்புமுறைகளிலும் ஒற்றுமைகள் என்ன, வேற்றுமைகள் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். எல்லா கலாச்சாரங்களிலும் எழுப்பப்படும் ஒரு கேள்வி