சபரிநாதன் கவிதைகள்
தவறான எண்
நேற்று மரணம் அழைத்தது
நான் எடுத்துக் கேட்டேன்: யார் அது?
மெல்ல நகைத்து மெதுவாக உரைத்தது
‘உனக்குத் தெரியாதா என்ன? சொல் நீ யார்?’
நீர் உறையும் ஓசையூடே
நான் சொன்னேன் அஞ்சிய குழந்தையென. அதற்கது
‘ஓ.. சபரியா..
மன்னிக்கவும் தவறான எண்’ என்று
இணைப்பைத் துண்டித்துவிட்டது,
ரிசீவரில் ஒரே ஊளைக்காற்று
கடுங்குளிர்.
உப்பு
எல்லாமேநிறையஇருக்கின்றன
நிறையவீடுகள்
நிறையசக்கரங்கள்
நிறையகாதல்பாடல்கள்
நிறையசெய்திகள்
நிறையஆபாசத்தளங்கள்
நிரையம்
நமக்குமூச்சுமுட்டுவதுநமக்கேதெரியவில்லை
இப்போதுஷோப்பின்கேட்கவேண்டும்போலிருக்கிறதுஇப்போதே..
பட்டம்விடவேண்டும்போலிருக்கிறது
<p