தமிழ் சினிமா/ அரசியல் சில தோற்றப் பிழைகள்
தமிழ்த் திரைப்பட வரலாறும் தமிழகத்தின் அரசியல் எழுச்சியும் ஒரு அரை நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக பிரிக்க முடியாதவை. அப்படியானால் சினிமா என்கிற ஊடகத்தின் இயல்பான சில அடிப்படை சாதகபாதகங்களைப் புரிந்துகொண்டால்தான், தமிழக அரசியலில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, ஆளுமை, அதிலிருந்து கிளைத்தெழுந்த பிரபலங்களின் மக்கள் மீதான செல்வாக்கு ஆகியவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முடியும்.
“ஸெல்லுலாய்ட் ஃப்ரேம்களில் இழைக்கப்படும் கவிதை,” என்று ஒரு விமர்சகர் சினிமாவுக்கு இலக்கணம் வரையறுத்திருக்கிறார். சினிமா என்பது, அதுவே தன்னுள்ளே ஒரு மொழியாய் விரிவது. ஆம் சினிமா ஒரு மொழிதான். கட்புலனில் நம் கண்முன்னே ஒரு நி