அரபுநாடோடிக் கதை
ஒருநாள் நீதிபதி கறாகுஷ் நகரத் தெருவழியாக நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒருவன் நன்கு பதப்படுத்திய வான்கோழியை ஒரு தட்டத்தில் எடுத்துக்கொண்டு அதை முறுக வறுப்பதற்காகப் போறணையை (Bakery) நோக்கிப் போவதைக் கண்டு அவனைப் பின்தொடர்ந்தார்.
அந்த மனிதன் போறணை உரிமையாளனிடம் அந்த வான்கோழியைக் கொடுத்து அதை நன்கு வறுத்துவைக்கும்படியும் சில மணிநேரம் கழித்துத் தான் அதை எடுக்கவருவதாகவும் சொல்வதை அவர் கேட்டார். போறணை உரிமையாளன் அப்படியே தான் அதைத் தயார்படுத்திவைப்பதாக அந்த மனிதனிடம் கூறினான். அந்த மனிதன் அவ்விடத்தை விட்டுப் போன உடனே கறாகுஷ், போறணை உரிமையாளனிடம் சென்று,
“நான்தான் கறாகுஷ். இரவு உணவுக்கு நான் இந்த வான்கோழியைச் சாப்பிட ஆசைப்படுகிறேன். அது தயாரானதும் உடனடியாக அதை எனது மாளிகைக்கு அனுப்பிவை,” என்று கூறினார்.
“நல்லது பிரபுவே,” என்றான் அவன். “ஆனால், இந்த வான்கோழ