கோபுரமேறிச் சாடி உயிர்விடுதல்
தொலைத்தொடர்புக் கோபுர உச்சியில் ஏறி நின்று கீழே சாடி உயிர்விடப் போவதாகப் பயமுறுத்துவது என்பது இப்போது சாதாரணமாகிவிட்டது. இது பயமுறுத்தலுக்கு என்றாலும் உண்மையாகவே விழுந்து உயிர்விட்டவர்கள் உண்டு. இவை பெரும்பாலும் தன் சொந்தத் தேவையின் சிக்கல் காரணமாக நிகழும் பயமுறுத்தல்கள். சசிபெருமாளைப் போல் பொது நன்மைக்காக உயிர்விட்டவர்கள் குறைவு. இப்படி உயரமான இடத்திலிருந்து சாடி உயிர்துறப்பது பழைய பண்பாட்டின் கூறு.
பழம் இலக்கியங்களில் ...
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை என்னும் இலக்கியத்தில் ஒரு பாடலின் நிகழ்ச்சி. ஒருமுறை மரம் தாவும்போது ஆண் குரங்கு ஒன்று தவறுதலாய் விழுந்து இறந்துவிட்டது. அதனால் வருத்தமுற்ற அதன் காதலியான பெண் குரங்கு பெரிய மலையின் மேல் ஏறிச் சாடி உயிர்விட்டது.
சிலப்பதிகாரம் கட்டுரைக்காதையில் வரும் ஒரு செய்தி. சங்கமன் என்பவனை ஒற்றன் என நினைத்துக் கொலை செய்கிறான் கோவலன். சங்