உயர்ந்தவன்
உயர்ந்தவன்
கார்த்திகேசு கொஞ்சம் குள்ளமாயிருப்பார்
கணிதத்தில் பெரும் புலி என்பதால் பலருக்கு அவரிடம் பயம்.
ஆனால் அவருக்குச் சமூகம் கொடுத்த பட்டம் கட்டைக் கார்த்திகேசு.
ஜெர்மனியில் ஒரு மகன் இருக்கிறான் என்று ஒருமுறை சொன்னார்
காணி பூமியை விற்றுத்தான் அவனை அங்கே அனுப்பினாராம்
இன்று காலை என்னோடு கதைத்தபோது
அவனுக்கு இது பெரும் செலவில்லை என்றார் திடீரென்று.
எதைச் சொல்கிறார் கணிதப் புலி கார்த்திகேசு,
எனக்கும்தான் அறிய ஆவல்.
உல்லாசக் கப்பலில் ஒருமுறை ஏறிப்பார்க்கவேண்டும்.
ஏறிப் பார்க்க மட்டும் விருப்பமா அல்லது
ஒருமுறை பயணம் செய்ய விருப்பமா என்று கேட்டேன்.
யோசித்தார்
உல்லாசக் கப்பல் இலங்கைக்கு வருவதில்லை
ஏறிப்பார்க்கவென்றால் சிங்கப்பூர்தான் போகவேண்டும்,
அது பெரிய ச