ஆறுதல் அணங்குகள்- அதிகாரம் 2
இந்தத் தலைப்பு ஏதோ தீரன்: அதிகாரம்1 ஐப் பின்பற்றுவது போல் தெரிகிறது. ஆனால் இந்தத் தலைப்பு சினிமாவின் தாக்கம் அல்ல. காரணம் வேறு. இந்த ஆண்டு வந்த காலச்சுவடு முதல் இதழில் ஆறுதல் அணங்குகள் பற்றி எழுதியிருந்தேன். அதில் Nora Okja Keller M¡ Comfort Woman என்ற நாவலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ஒரு மகள் பழைய ஆறுதல் அணங்காக இருந்த தன் தாயைப் புரிந்துகொள்ள முயலும் நாவல் இது. இக்கட்டுரை எழுதி முடித்தபின் ஆறுதல் அணங்குகள் பற்றி இன்னுமொரு புதிய நாவல் வந்திருக்கிறது. அந்தக் கட்டுரையைப் பூர்த்தி செய்ய இந்த நூலையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நாவலின் பெயர் White Chrysanthemum. இதை எழுதியவர் லண்டனில் வாழும் கொரிய-அமெரிக்கரான மேரி லிண் பிரக்ட் Mary Lynn Bracht. நாவலின் தலைப்புப் பற்றி ஒரு சிறு விளக்கம். ஜப்பானிய, கொரிய சமுதாயங்களிடையே சாமந்திப்பூ (Chrysanthemum) இருவித அர்த்தங்களைத் தருகிறது.