பள்ளிப் பாடநூல்கள்:உருவாக்கமும் மொழி அரசியலும்
வரும் ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் மாநில அரசுத் தேர்வு வாரியங்களின் கீழுள்ள பள்ளிக் குழந்தைகள், புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடநூல்களைப் பயன்படுத்தப்போகிறார்கள்.
இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 15 இலட்சம். இவற்றில் ஏறக்குறைய 80 இலட்சம் ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் அரசு நடத்துபவை என்றாலும் அரசின் உதவி இல்லாமல் நடத்தும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு எதிர்மறையாகக் கடந்த வருடம் மட்டும் ஏறத்தாழ 1.5 இலட்சம் அரசுப்பள்ளிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மூடுவிழாவை, “அருகிலுள்ள பெரிய பள்ளிகளோடு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை இணைக்கிறோம்,” என்று சொல்லிக்கொண்டு அரசுகள் செய்கின்றனவாம். இன்று 25 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்கு வருகிறா