கொள்ளை
ஓவியங்கள்: செல்வம்
வெள்ளையத்தேவன் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தான். ஆக்குப்புரையிலிருந்து கறி வேகும் வாசனை அத்தனை அறை, வராந்தாக்களையும் தாண்டி மூக்கிற்குள் ஏறியது. மான் கறியை நினைத்ததும் உடனே பசி வந்துவிட்டது. ஊஞ்சலிலிருந்து எழுந்து முன் வாசல் பக்கம் போய்க் காலக்கம்பத்தின் நிழலைப் பார்த்தான். எப்படியும் மணி ஒன்றுக்கு மேல் இருக்கும். வியர்வை கசகசத்தது. தோளில் போட்டிருந்த துண்டு வியர்வையில் முதுகோடு முதுகாக ஒட்டிக்கொண்டிருந்தது. சாமரம் வீசுகிறவன் மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக பண்ணைக்குப் போய்விட்டான். ராசா சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடக் கூடாது. அதற்குள் பார்த்துவிட வேண்டும்.
எடமாத்தூர் தேவன் வருவது தெரிந்தது. ஏதாவது தகவல் இருக்க வேண்டும். வெள்ளையத்தேவனையே பார்த்தவாறு வந்துகொண்டிருந்தான். வீட்டை நெருங்கும்போது வேகமாகக் கால்கள