பாரதியியல் முன்னோடியுடன் ஒரு சந்திப்பு
சீனி. விசுவநாதன்
Courtesy: சரண்ராஜ் சரவணன்
பாரதி நினைவு நூற்றாண்டு உருண்டோடி ஓர் ஆண்டு ஆகிவிட்டது. பாரதியின் 141ஆம் பிறந்தநாளும் வரப்போகிறது. பாரதியின் படைப்புகளையும் பாரதி வாழ்க்கை குறித்த ஆவணங்களையும் தேடித் தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்திய பாரதியின் இளவல் சி. விசுவநாத ஐயர், பெ. தூரன், ரா.அ. பத்மநாபன் மூவரின் நூற்றாண்டுகளும்கூடக் கடந்துவிட்டன. இந்த மரபில் மகாகவி பாரதியின் எழுத்துகளையெல்லாம் கண் துஞ்சாது கை சோராது தேடிக் கண்டறிந்து வெளிப்படுத்திப் பாரதியாரின் பேராளுமையை நாம் மட்டுமல்லாது வரும் காலத் தலைமுறைகளும் காண வழிவகுத்த மூவர் இன்று நம்மிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பாரதியியல் முன்னோடி அறிஞர் ச