காஸாவின் துயரம்
“நான் ஓர் அரபுத் தலைவனாக இருந்தால் ஒருபோதும் இஸ்ரேலுடன் இசைந்து செல்ல மாட்டேன். அதுதான் இயற்கை. அவர்களது நாட்டை நாம் பறித்துக்கொண்டோம். உண்மைதான், இந்த நிலம் நமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டது.அதை ஏன் அவர்கள் பொருட்படுத்த வேண்டும்? நமது கடவுள் அவர்களின் கடவுள் அல்ல. நாம் இஸ்ரேலிலிருந்து வந்தவர்கள் என்பது உண்மை, ஆனால் அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். அதனால் அவர்களுக்கென்ன? யூத வெறுப்பு, நாஜிகள், ஹிட்லர், ஆஷ்விட்ஸ் என பல துன்பங்கள் நமக்கு. ஆனால் அவர்களின் தவறென்ன? அவர்கள் பார்க்கும் விஷயம் ஒன்றுதான், நாம் இங்கு வந்து அவர்களது நாட்டைத் திருடினோம். அதை அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?’’
“சையோனிசப் பிரச்சினையை அறரீதியாக அணுகுபவர் சையோனிசவாதியாக இருக்க முடியாது’’ - பென்-குரியான் (இஸ்ரேலை உருவாக்கிய தலைவர்களுள் முதன்மையானவர், அதன் முதல் பிரதமர்.)
’’பாலஸ்தீனத்தில் இருக்கும் சில லட்சம் நீக்ரோக்கள் (அதாவது பாலஸ்தீனர்கள்) எந்த வகையிலும் பொருட்படுத்தத் தக்கவர்கள் அல்லர்’&rsq