பஞ்சு பரிசில் 2023
விருதுத் தேர்விற்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது ரூபாய் 10,000, நினைவுக் கேடயம், சான்றிதழ் ஆகியனவற்றை உள்ளடக்கியது. இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, நுண்கலைகள், தொல்லியல், நாட்டுப்புறவியல், மானுடவியல் திறனாய்வு நூல்கள் தேர்வுக்குரியன.
தேர்வுக்கு அனுப்பப் பெறும் நூல் 2023 ஜனவரித் திங்கள் முதல் 2024 ஜனவரி திங்கள் வரையிலான காலப்பகுதியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். படைப்பிலக்கியம் சார்ந்த கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் ஆகிய நூல்கள் தேர்வுக்குரியனவல்ல.
க. பஞ்சாங்கத்தின் பிறந்த நாளையொட்டி 2024 பிப்ரவரியில் நடைபெறும் புதுவை நிகழ்வில் பஞ்சு பரிசில் வழங்கப்படும்.
நூல்கள் வந்து சேர வேண்டிய
இறுதி நாள் 20.01.2024
தொடர்பு முகவரி: பாரதிபுத்திரன்
10, 4ஆம் குறுக்குத்தெரு, துர்கா காலனி
செம்பாக்கம், சென்னை-600073
கைப்பேசி: 94442 34511