பெரியார் - ராஜாஜி - காமராசர்
கடந்த நூற்றாண்டின் தமிழக அரசியலில் ஆழமான பாதிப்பைச் செலுத்திய ஆளுமைகளில் பெரியார், ராஜாஜி, காமராசர் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்த மூவரும் வெவ்வேறு கோட்பாட்டினை ஏற்றுச் செயல்பட்டவர்கள். இணங்கியும் பிணங்கியும் சமூக அரசியலில் பணியாற்றிய இந்த ஆளுமைகளுக்கிடையில் நிலவிய அன்பு வரலாற்றுப் பெருமையுடையது. டிசம்பர் 10 ராஜாஜியின் பிறந்த நாள்; டிசம்பர் 25 அவருடைய நினைவு நாள். டிசம்பர் 23 பெரியாரின் 50ஆவது நினைவு நாள். காமராஜரின் நினைவு நாள் அக்டோபர் 2. இந்தத் தருணத்தில் இந்த மூன்று ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளை வெளியிடுகிறோம்.
- பொறுப்பாசிரியர்