பழம்பெரும் நாள்
ஓவியங்கள்: றஷ்மி
அந்த ஞாயிற்றுக்கிழமை விடிந்திருக்கக் கூடாது. அப்படியே விடிந்திருந்தாலும் அச்சம்பவம் நடந்திருக்க வேண்டாம். அப்துல்லாவின் வாழ்க்கையைத் திருப்பிப் போடுவதற்காக, வாழ்க்கையோடு விளையாடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை விடிந்திருக்கிறது. வழக்கமாக, அப்துல்லா விடிந்த பிறகு வீட்டிலிருந்து தன்னுடைய பெட்டிக் கடையைத் திறக்கப் புறப்படுவான். கடைச் சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு ஹெர்குலிஸ் சைக்கிளில் வரும்போது, காய்கறிச் சந்தையில் கடை போடுவதற்குத் தயாராகிக்கொண்டிருப்பார்கள். கடையை உடைத்து ஸ்டாலை நடுரோட்டில் இழுத்துப் போட்டுவிட்டதாகத் தகவல் கிடைத்ததும் சைக்கிளை எடுக்காமல் வேகமாக நடந்து வந்தான். நேற்றிரவு யாரோ கடையின் பூட்டை உடைத்துப் பொருட்களைத் தெருவில் எறிந்திருக்கிறார்கள். யாரென்று தெரியவில்லை.
“என் மேல் இர