பெரியார்- ராஜாஜி: அன்பார்ந்த எதிரிகள்
இராஜாஜி vs பெரியார் என்றதும் தமிழ்நாட்டினருக்கு அவர்களது அரசியல் சார்புகளை அடுத்து மனத்தில் தோன்றுவது, இருவருக்குமிடையிலான கொள்கைகளால் குலைந்துவிடாத தனிப்பட்ட நட்பு. நட்பில் இரகசியம் காப்பது ஒரு முக்கியமான அம்சம். அரசியல்வாதிகளாக இருந்தும் இரகசியத்தைக் கடைப்பிடித்த கண்ணியவான்கள் இருவரும். இராஜாஜியைத் திருவண்ணாமலையில் 1949 மே 14ஆம் தேதி காலை 6:45 மணிக்குச் சந்தித்தார் பெரியார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. திராவிடர் இயக்கத் தோழர்களுக்குப் பெருத்த சந்தேகத்தையும் குழப்பத்தையும் கொடுத்த அச்சந்திப்பின் காரணத்தைப் பல நெருக்கடிகளிலும் வெளிப்படுத்தாமல் இருவரும் அமைதி காத்தனர். இதையே இவர்கள் நட்பின் தன்மையைக் காட்டும் கட்டளைக் கல்லாகத் தமிழ் அரசியல் உலகம் கருதிவருகிறது.
திருவண்ணாமலை சந்திப்பு நிகழ்ந்த 1949இல் இராஜாஜி, காங்கிரசு முன்மொழிந்ததில் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். பெரியாரோ ‘கல்’லுப் போன்ற அந்தக் காங்கிரசை எதிர்த்துக்கொண்டிருந்தார். காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் (1925) கட்சியை விட்டு வெளியேறியபோது, ‘நாயக்கரே, காங்கிர