ராஜாஜி - காமராசர்: கோடும் குன்றமும்
1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் திராவிடக் கட்சிகள் இரண்டும் மாறிமாறி ஆட்சி புரிந்து தமிழக அரசியல் களத்தில் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. அதற்கு முன் ஒரு முக்கால் நூற்றாண்டுக்கும் மேல் காங்கிரஸ் கட்சி மேலாண்மை செலுத்திய வரலாற்றை இது மறைத்துவிட்டது எனலாம். 1885இல் பம்பாயில் கூடிய முதல் காங்கிரஸ் மாநாட்டின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். 1950களின் பிற்பகுதியில் காமராசர் முதலமைச்சராக விளங்கியபோது வேறு கட்சி அரசு கட்டிலில் ஏற முடியும் என்று எவரும் நினைத்தும் பார்த்திருக்க முடியாது.
காங்கிரஸ் கட்சியின் தொடக்க காலம் பிராமணர் வயப்பட்டிருந்தது. 1916இல் வெளியான ‘பார்ப்பனரல்லாதார் அறிக்கை’ இந்த ஆதிக்கத்திற்கு முதல் அரசியல் அறைகூவலாக அமைந்தது. ‘சென்னை அரசியல் என்று சொல்லப்படுவதில் பார்ப்பனரல்லாதார் தமக்குரிய பங்கை இன்னும் பெறவில்லை’ என்ற வாசகம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி தோன்றியது. பிராமணரல்லாதார் அதி