முரணும் இணக்கமும்: சாதி பற்றிய நான்கு படங்கள்
2023இல் சில நாட்கள் இடைவெளிக்குள் கழுவேத்தி மூர்க்கன், இராவணக் கோட்டம் ஆகிய படங்கள் வெளியாயின. அதற்கு முன்னர் ‘விட்னஸ்’ படமும் பின்னர் ‘தமிழ்க்குடிமகன்’ படமும் வந்தன. இந்நான்கு படங்களிலும் தலித்துகளும் சாதியும் மையப்படுத்தப்பட்டுள்ளனர்.
தலித், சாதி பற்றிப் பேசியதற்காக மட்டும் இப்படங்கள் எடுத்துக்கொள்ளவில்லை. சினிமாவிலும் அரசியலிலும் உருவாகியுள்ள தலித் குரல் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக சினிமா போன்ற வணிகவெளியில் சமூகத்தில் கவனம் பெறக்கூடிய விசயங்கள் ஏதுவாக உடனே இடம்பெற்றுவிடும். அவை அப்பிரச்சினை மீதான அக்கறையைக் காட்டிலும் வணிக வெற்றிக்கான காரணமாக இருந்திருக்கும். தலித் சாதி, ஆகியன வணிக வெற்றிக்குரியதாக மாறியபோது பல படங்களிலும் காட்சியாகவோ வசனமாகவோ அவை இடம்பெற்றன. குறிப்பாக ஆணவக்கொலை பற்றிய குறிப்பிடல் பல படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ள படங்கள் வணிக வெற்றியையும் தாண்டி இப்பிரச்சினையைத் தங்கள் புரிதலின் எல்லைக்குட்பட்டு அக்கறையோடு