பயணியின் குறிப்பேடு
வாசிப்பு அனுபவப் பகிர்வு என்று சொல்வது பொருள் மயக்கம் தருகின்ற ஒரு பதம். அது நூல்நயமாகவோ மதிப்பீடாகவோ திறனாய்வாகவோ பூரணமானதொரு விமர்சன மாகவோ அல்லது கண்டனமாகவோ இருக்கலாம். இன்று நடைபெறுவதைப் போன்ற சிநேகபூர்வமான இலக்கியச் சந்திப்புகளில் வாசிப்பு அனுபவப் பகிர்வானது பொதுவாக நூல்நயம் உரைத்தலாகவே அமைந்து விடுவதுண்டு.
எங்களூரில் வேடிக்கையான நாட்டார் கதையொன்று வழக்கில் இருக்கின்றது. இரவுக் கூத்துக்குத் தன்னையும் கூட அழைத்துப் போகுமாறு கண்பார்வையற்றவர் ஒருவர் தனது வீட்டாரைக் கேட்டாராம். “கண் தெரியாத நீ, கூத்தில் எதைப் பார்க்கப் போகிறாய்” என்று அவரை உதாசீனப்படுத்தி, வீட்டிலுள்ள ஏனையோர் அனைவரும் கூத்துப் பார்க்கப் போய்விட்டார்கள். வீம்பு பிடித்த அந்த மனிதனும் இரவின் இருட்டில் தட்டித் தடவித் தடுமாறி நடந்து, கூத்து நடக்கும் இடத்தைத் தேடிப் போனாராம். போகும் வழியில் பெரிய