யெகோவாவின் சாட்சிகள்: சில ஒவ்வாமைகள்
யூதம் - இஸ்லாம் - கிறிஸ்தவம் தொடர்பான தத்துவ விளக்கங் களாலும் விவாதங்களாலும் விமர்சனங் களாலும் பாலஸ்தீனம் x இஸ்ரேல் போரின் பக்கவிளைவாக மூச்சுத் திணறிக் கொண்டிருந்த இணையத்தின் பளுவை மேலும் கூட்டியது ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ மதப் பிரிவினர் தொடர்பான விவகாரம். கேரள மாநிலம், கொச்சியை அடுத்த களமசேரியில் அமைந்துள்ள ஜமாரா வளாகத்தில் நடை பெற்றது ‘யெகோவாவின் சாட்சிகள்’ அமைப்பின் சங்கமம். ‘பொறுமையுடன் வாழ்தல்’ என்ற பொருளில் நடந்த மூன்று நாள் சங்கமத்தின் இறுதி நாள்; அக்டோபர் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை, அந்நாளின் முதல் அமர்வு நடந்துகொண்டிருந்தபோது, 9.40 மணிக்கு நிகழ்ந்திருக்கிறது அத்துயரம். சுமூகமாக நகர்ந்துகொண்டிருந்த நிகழ்வு பதற்றத்துக்குள்ளாகி, அரங்கு பரபரப்பாகி யிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் இணையமும் பரபரப்பானது. அப்படியென்ன துயரம் நிகழ்ந்தது