எதேச்சாதிகாரத்துக்கு எதிரான எழுத்து
அல்பேனிய இலக்கிய விற்பன்னரும் அல்பேனிய இலக்கியங்களை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தவரும் அல்பேனிய இலக்கிய வரலாற்றை எழுதியவரும் கனடியப் பேராசிரியருமான டாக்டர். ராபர்ட் எல்சி (1950–2017 ) இந்தக் கட்டுரையாளருக்கு 2007ஆம் ஆண்டு அனுப்பிய மின்னஞ்சலில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். “சந்தேகத்துக்கு இடமின்றி நவீன அல்பேனிய இலக்கியத்தின் முதன்மையான குரல் இஸ்மாயில் கதாரேயுடையதுதான். அவர் அளவுக்கு இலக்கியத் தரமாக இத்தனை புத்தகங்கள் எழுதியவர்கள் எவரும் இல்லை. அல்பேனிய மொழியில் மட்டுமல்ல, எனக்குத் தெரிந்து ஐரோப்பிய மொழிகளிலும் இல்லை. அவ்வளவு சரளமான எழுத்தாளர். இது ஒரு புகழ். அல்பேனிய இலக்கியத்தை முன்னிருத்தி அவரையே சமகால அல்பேனியாவின் மனச்சான்று என்று சொல்ல வேண்டும். இது அவருடைய புகழுக்கு இன்னொரு பெருமை.’’
எழுதத் தொடங்கிய நாள்முதல் இறுதிவரை இந்த இரட்டை இயல்புக்கு, புகழுக்கு உரியவராக இருந்தார் இஸ்மாயில் கதாரே. சரளமாகவும் ஏராளமாகவும் கவிதைகள் எழுதி இலக்கிய உலகில் அறிமுகமான கதாரே 1960இல் வெளியான தன் முதல் நா