பறையிசை: அதிகாரமும் விடுதலையும்
தலித் தரப்பில் விவாதத்திற்கு உள்ளாகும் அம்சங்களில் ஒன்றாகப் பறையிசை, பறை மேளம் இருக்கிறது. பறை மேளம் உள்ளூர்ப் பண்பாட்டு நிகழ்வுகளில் அடிக்கப்படுவதைத் தாண்டிப் பொது மேடைகளில் இசைக்கப்படுவதாகவும் இன்றைக்கு மாறியிருக்கிறது. ஆனால் அது இசைக்கருவியாக மட்டுமல்லாமல் பட்டியல் தலித் சாதியான பறையர் வகுப்போடும் அச்சாதியைக் குறிக்கும் பெயரோடும் நேரடித் தொடர்பைப் பெற்றிருக்கிறது. எனவே இன்றளவும் அது தலித் அடையாளத்துடன் பொருத்திப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்தான் பறையிசைபற்றிய விவாதம் எழுந்தெழுந்து அடங்குகிறது. பறையோடு தொடர்பு படுத்தப்படும் அச்சாதியில் ஒரு தரப்பு அதனை அடிக்கக் கூடாது என்கிறது; மற்றொரு தரப்பு அடிக்கக் கூடாது என்ற பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும், அது நம் அடையாளம்தான் என்கிறது.
பறையர் என்போர் குறித்த குறிப்புகள்
தென்னகத்தின் பழங்குடிகளில் ஒன்றாகப் பறையர் வகுப்பு கருதப்படுகிறது. பறை இசைக்கருவிபற்றியும், பறையர் என்ற குழுவினர் பற்றியும் சங்கப் பாடல்களில் (புறநானூறு 335) குறிப்புகள் கிடைக்கின்றன. அதேவேளையில்