இலக்கிய உறவின் பாலம்
அண்மையில் காலச்சுவடு பதிப்பாளர்-ஆசிரியர் கண்ணன், எழுத்தாளர்கள் ஆ.இரா. வேங்கடாசலபதி, பெருமாள்முருகன், கர்னாடக இசைக் கலைஞரும் எழுத்தாளருமான டி.எம். கிருஷ்ணா ஆகியோர் இலங்கைக்குச் சென்று இலக்கியம் சார்ந்த பல கூட்டங்களிலும் கலந்துரையாடல்களிலும் கலந்துகொண்டார்கள். மானுடம் அமைப்பும் பண்பாட்டுக் களச் செயல்பாட்டாளர் பௌசர் இலங்கையில் தொடங்கியுள்ள வாசிப்பு, எழுத்து, புத்தகப் பரவலாக்கம் இயக்கத்தின் தொடக்க நிகழ்வு கொழும்பில் ஜூன் 22, 23 தினங்களில் நடைபெற்றது. அங்கு கண்ணன் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் இது.
காலச்சுவடுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமிடையிலான உறவின் பல்வேறு கண்ணிகளைத் தொட்டுச் செல்லும் உரை இது.
சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பு நகரினுள் வருகிறேன். கடந்த இரண்டு பயணங்களிலும் கொழும்பு வரவில்லை. அதற்கு முன்னர் ஐந்தாறு முறைகளேனும் கொழும்பு வந்திருப்பேன். எனக்கு இங்கிருந்த நெருங்கிய நண்பர்கள் புலம் பெயர்ந்துவிட்டார்கள். அவ்வை, பௌசர், சிவா, விக்கி,