ஓநாய் அடக்கம்
ஓவியங்கள்: ரவி பேலட்
ஓ நாயின் உயிரற்ற உடல் கழுமரத்தில் தொங்கிவிட்டது. சதை அழுக ஆரம்பித்தது. காற்றுக்கு அழுகிய இறைச்சியின் வாடை. புழுக்கள் நுரைத்துப் பொங்கி நெளிந்துகொண்டிருந்தன. அழுகும் இறைச்சியைப் படுக்கையாக்கி அவை உடலுறவு கொள்ளவும் செய்கின்றன. எலும்புகள் சதையிலிருந்து விலக ஆரம்பித்தன. பழுப்பு நிறத் தோல் நிறம் மங்கிக் கருமையாகிவிடும். அதுதான் அடையாளம். எதிரி முற்றிலும் ஒழிந்துவிட்டதற்கான அறிகுறி. கழுமரத்தில் தொங்கவிடும் கயிறு வெயில் பட்டு மக்கி உடைந்து கீழே விழுந்திடும். அப்போது குழியைத் தோண்ட வேண்டும். உணர்வின்மையின் கடைசிப் பகுதியை மணல் குழிக்குள் புதைக்க வேண்டும்.
அதற்காகதத்தான் காத்திருக்கிறான் ஆபித் ஹுசைன்.
இல்லை, அவனுக்கு வேறு வேலைகளும் உள்ளன.
அழுகிய இறைச்சியின் வாடையை முகர்ந்தால் கழு