இரு கண்கள் ஒரு காட்சி
தலாக் சொல்லப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்குவது சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. 1985இல் ஷாபானோ வழக்கு தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை இந்தப் பிரச்சினை அவ்வப்போது நம் விவாதங்களுக்குள் வந்துகொண்டிருப்பது ஏன்?
நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் நாடோ அல்லது சமூகமோ இருக்குமாயின் அப்பிரச்சினை இருதரப்புக்கும் பெரும் சுமையாக மாறியிருப்பதாகத்தான் அர்த்தம். இந்திய அரசியலில் முஸ்லிம் சமூகம் எந்த அளவுக்குப் பாரபட்சமாக நடத்தப்படுகிறதோ, அதே அளவுக்கு முஸ்லிம் சமூகத்தின் பெண்களும் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகிறார்கள்.
அரசியல் சட்டம் ஒருபுறமும் முஸ்லிம் தனிநபர் சட்டம் மறுபுறமுமாக முஸ்லிம் பெண்களைத் தீராத பரமபத விளையாட்டில் இறக்கிவிட்டுவிட்டன. ஆனால் எந்தவொரு பிரச்சினையென்றாலும் அதற்கான சிக்கல் சமூக வேர்களில்தான் இருக்கிறது. இந்த உண்மையைப் புரிந்துகொள்வதில் நீதித் துறையைவிட சம்பந்தப்பட்ட சமூகத்துக்குத்தான் பொறுப்பு அதிகமாயிருக்க வேண்டும். மாறிவரும் சமூகச் சூழலைப் புரிந்துகொள்ளாமல் முற்காலச் சூழல்களுக்கு மட்டுமே முன்னுரி