மாணவர்களும் சாதிய மோதல்களும்
சென்ற ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சார்ந்த பட்டியலின மாணவனை அவனுடன் பயின்ற இடைநிலைச் சாதி மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொடூரத் தாக்குதல் நடத்தியது பேரதிர்ச்சியையும் தீவிர ஊடக விவாதத்தையும் உருவாக்கின. அதன் பிறகான ஓராண்டுக் காலத்தில் பல்வேறு நிகழ்வுகளைக் கடந்துவிட்ட நிலையில் நாங்குநேரிச் சம்பவம் மனத்தின் அடியாழத்தில் ஒதுங்கியிருக்கக்கூடும்.
அக்கொடூரத்தைக் குறித்து விசாரிக்கவும், மாணவர் களுக்கிடையே சாதி மோதல்கள் நேராமலிருக்கப் பரிந்துரைகள் வழங்கவும் பணிநிறைவு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துருவை ஒருநபர் விசாரணைக் குழுவாக 12.8.2023 அன்று தமிழ்நாடு அரசு நியமித்ததை நினைவுபடுத்திக்கொள்வோம். மேற்சொன்ன விவகாரம் குறித்து விசாரித்து தயாரித்த அறிக்கையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கியுள்