நிறைகளும் சிக்கல்களும்
Courtesy: Divya Ribeiro
மேனாள் நீதியரசர் சந்துரு, சாதி சமய வேறுபாடுகள் மாணவர்களிடம் எவ்வகையிலும் பரவாமல், கல்வி நிலையத்தின் இணக்கமான, இனிய சூழலை நிலைநிறுத்தி வன்முறை ஏதும் அவர்களுக்குள் நிகழா வண்ணம் பாதுகாக்கும் வகையில் ஒரு நபர் குழுவாக அரசிடம் அளித்த பரிந்துரைகளை அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்தப் பரிந்துரைகளில் பல இப்போது நிலவிவரும் பெரும்பாலான சாதி சமயப் பூசல்களைத் தவிர்க்க உதவிகரமாக அமையக்கூடும். எனினும் சில பரிந்துரைகள் நடைமுறைப் படுத்துவதற்குச் சிக்கலானவையாகவும் புதிய பிரச்சினைகளுக்கு வித்திடுபவையாகவும் அமைந்துள்ளன.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் கொடிய வரலாற்றைச் சீர்செய்வதற்காக அமைக்கப்பட்டவை. அந்தப் பெயர்கள் இருப்பதால் எந்தப் பூசலும் இதுவரை எழுந்ததாகத் தெரியவில்லை. இவற்றின் நிர்